திருவண்ணாமலை பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்று. பஞ்சபூதங்களில் ஒன்றான
அக்னிக்கு உகந்த கோவில் இங்குள்ளது.
பிற தலங்களில், சிதம்பரம் ஆகாயத்தையும்,
காளஹஸ்தி காற்றையும், திருவானைக்காவல் நீரையும்,
காஞ்சிபுரம் நிலத்தையும் குறிக்கும் தலங்கள் ஆகும்.
திருவண்ணாமலையில் வருடம்
முழுவதும் திருவிழாக்கள் நடந்துகொண்டு
இருக்கும். இது
தவிர ஓரு வருடத்தில் நான்கு முறை கொண்டாடப்படும் பிரம்மோற்சவங்களில், தமிழ் மாதமாம் கார்த்திகையில்
கொண்டாடப்படும் பிரம்மோற்சவமே மிக சிறப்பானதாகும். இது ஆங்கில மாதம் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் வரும்.
இத்திருவிழா, பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் பத்தாம் நாள்
திருவிழாவே கார்த்திகை தீபத் திருவிழா ஆகும். இந்த பத்தாம் நாளன்று
காலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். பின்னர்
மாலை அண்ணாமலை என அழைக்கப்படும் மலையின் உச்சியில் நெய்யினால் தீபம் ஏற்றப்படும். இந்த தீபமானது தொடர்ந்து
பதினோறு நாட்கள் எரியக்கூடியது.
இத்திருவிழா
மட்டுமின்றி, ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள்
அண்ணாமலையை வலம் வருவார்கள். இது கிரிவலம் என அழைக்கப்படுகிறது.
இம்மலையின் சுற்றளவு 14 கி.மீ அகும். இத்தூரத்தை மக்கள்,
காலில் செருப்பு அணியாமல் சுற்றி வருவர்.
இங்கு
பல சித்தர்களும் வேதாந்திகளும் வாழ்ந்துள்ளனர்/வாழ்கின்றனர். பகவான் இரமண மஹரிஷி இறக்கும் வரை (1950) திருவண்ணாமலையில் வாழ்ந்தார்.
கிரிவலம்
திருவண்ணாமலையை ஒருமுறை கிரிவலம் வருவதற்கே பக்தர்கள்
சிரமப்படுகிறார்கள். இதன் சுற்றளவு 14 கி.மீ முதல் 16 கி,மீ என்பதால் நடப்பதற்கே
சிரமப்பட வேண்டியுள்ளது. ஆனால் ஒரு காலத்தில் இம்மலையை 5 முறைவலம் வந்தார்களாம்.
காரணம் இவ்வாறு வலம் வந்தால் மறுபிறவியற்ற நிலை ஏற்படும் என்பது நம்பிக்கையாக
இருந்த்து.
திருவண்ணாமலையை இரவு
7 மணிக்குப் பிறகுதான் சுற்ற ஆரம்பிக்க வேண்டும், அப்போதுதான் சந்திரனின் பதினாறு
கலைகளிலும் இருந்து வரும் கதிர்கள் உடலில் படும். இது மன தைரியத்தைக் கொடுக்கும்.
திருவண்ணாமலையை வலம் வரும்போது மற்ற பக்தர்களுக்கு இடையூறு
செய்யாமல், யார் மீதும் மோதாமலும் செல்ல வேண்டும்.
நமசிவாய வாழ்க,
அண்ணாமலைக்கு அரோகரா, அருணாச்சலமே போற்றி என்கிற மந்திரங்களை மட்டுமே
உச்சரித்துக்கொண்டே செல்ல வேண்டும். இதைத்தவிர மற்ற கதைகளை பேசிக்கொண்டு மலை
சுற்றக்கூடாது. இதனால் எவ்வித பயனுமில்லை.
திருவண்ணாமலையின்
உயரம் 2,668 அடி, இதன் சுற்றளவு 16 கி.மீ இந்த மலைப்பகுதி திருவண்ணாமலை நகராட்சி
மற்றும் 6 ஊராட்சிகளின் எல்லைக்குள் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கி அமைந்துள்ள
மலையின் முகப்பு பகுதி மட்டும் 718 ஏக்கர் அளவு கொண்டுள்ளது. எண்கோண அமைப்பில்
மலையிருக்கிறது மலையைச் சுற்றி எட்டு லிங்கங்கள் உள்ளன.
திருவண்ணாமலையை வலம்
வந்த ஒருவர் இறந்து போனால அவர் கைலாயத்திற்குள் நுழையும்போது சந்திரன்
வெள்ளைக்குடை பிடிப்பான் என்றும், சூரியன் கையில் விளக்கேத்தி வருவான் என்றும்,
இந்திரன் மலர் தூவுவான் என்றும், குபேரன் தண்டனிட்டு (பணிந்து) வரவேற்பான்
என்றும், அருணாசல ஸ்தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
கிரிவலம் வரும் வழியில் முதலில்
தோன்றுவது இந்திரலிங்கம். இந்தலிங்கம் கிழக்கே பார்த்து
அமைக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கம் பூலோக தேவனான
இந்திரதேவனால் நிறுவப்பட்டது. சூரியனின்
மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள லிங்கம்
வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும்.
கிரிவலம் வரும் வழியில் இரண்டாவது
லிங்கம் அக்னிலிங்கம். இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கியுள்ளது. இந்த லிங்கத்தின்
சிறப்பம்சம்
என்னவென்றால் இது கிரிவலம் செல்லும் வழியில் இடது புறம் இருக்கும் ஒரே லிங்கம் ஆகும்.
அக்னிலிங்கத்தை பிராத்தனை செய்யும் பக்தர்கள் நோயின்றி முழு ஆரோக்கியத்துடன்
வாழ்வார்கள் என நம்பபடுகிறது. இந்த
லிங்கத்தின்
கிரகம் சந்திரன். மேலும் சந்திரகிரகம்
என்பதால் வாழ்க்கையில் வரும் இடஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது என நம்புகிறார்கள். இந்த லிங்கம் தாமரை தெப்பகுளத்திற்கு அருகே உள்ளது.
கிரிவலத்தில் மூன்றாவது லிங்கமாக அமைந்துள்ள லிங்கம் யமலிங்கம். இந்த லிங்கம் தெற்கு திசையை
நோக்கியுள்ளது யமதர்மனால் நிறுவப்பட்ட
லிங்கம் என கூறப்படுகிறது. இது செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம். இதனருகில் சிம்ம தீர்த்தம் உள்ள தெப்பகுளம் அமைந்துள்ளது. இதை
வேண்டுபவர்களுக்கு
பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்என நம்பபடுகிறது.
கிரிவலம் பாதையில் நான்காவதாக உள்ள லிங்கம் நிருதி லிங்கம். இதன் திசை தென்கிழக்காகும். இதனுடைய
கிரகம் ராகுவாகும். பூதங்களின் ராஜாவால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது. இதை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாக பிரச்னைகளின்றி வாழலாம்.
கிரிவலம் பாதையில் ஐந்தாவதாக உள்ள லிங்கம் வருண லிங்கம். இதற்குரிய திசை
மேற்கு.
மலைதரும் வருணதேவனால் இந்த லிங்கம்
நிறுவப்பட்டது.
இந்த லிங்கத்தை ஆட்சி செய்யும் கிரகம் சனி பகவான்.
இங்கு வருண தீர்த்தம் என்னும் தெப்பகுளம்
உள்ளது. சமூகத்தில் முன்னேற்றமடையவும் கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிராத்தனை செய்ய
வேண்டும்.
கிரிவலம் பாதையில் ஆறாவதாக உள்ள லிங்கம் வாயு லிங்கம். இந்த லிங்கம் வடமேற்கு திசையை
நோக்கியுள்ளது. வாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது.
இதை ஆட்சி செய்யும் கிரகம் கேதுவாகும்.
இந்த லிங்கத்தை சேவித்து வந்தால் இருதயம், வயிறு, நுரையிறல், மற்றும் பொதுவாக வரும் நோய்களிலிருந்து
காத்து கொள்ளலாம்.
கிரிவலத்தில் உள்ள ஏழாவது லிங்கம் குபேர லிங்கம். வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது. செல்வத்தை வழங்கும் குபேர தெய்வத்தினால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிராத்தனை செய்ய வேண்டும்.
கிரிவலத்தில் உள்ள கடைசி லிங்கம் ஈசானிய லிங்கம். வடகிழக்கை நோக்கியுள்ள இந்த
லிங்கம் எசானிய தேவரால் நிருவப்பட்டது. புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது. இந்த லிங்கத்தை சேவித்து வரும் பக்தர்கள் மன அமைதியுடனும்,
அனைத்து காரியங்களிலும் ஜெயம் கொண்டு திகழ்வார்கள்.
குழந்தை பாக்கியம் தரும் இடுக்கு பிள்ளையார்
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் குபேரலிங்கம் கோவிலுக்கு
அடுத்தாற்போல் உள்ளது இருக்கு பிள்ளையார் கோவில். மிகச்சிறிய இந்த கோவிலுக்கு ஒரே
வரிசையில் மூன்று வாசல்கள் உள்ளன. பின் வாசல் வழியாக நுழைந்து 2-வது வாசலைக்
கடந்து முதல் வாசல் வழியாக வெளியே வர வேண்டும். குனிந்தபடியே தான் நுழைந்து
ஒருக்களித்தவாறு தான் வெளியே வரமுடியும்.
இந்த கோவிலுக்குள்
இவ்வாறு நுழைந்து வெளியே வருபவர்களின் தலைவலி, பில்லி, சூனியம், உடல்வலி நோய்கள்
நீங்குவதுடன் குழந்தைவரம் வேண்டி கோவிலுக்குள் நுழைந்து வரும் பெண்களுக்கு
பிள்ளையார் அருளால் குழந்தை பாக்கியம் பெறுவதாகவும் நம்புகிறார்கள். இதனால்
பக்தர்கள் இந்தக் கோவிலுக்குள் தவறாமல் நுழைந்துசெல்வது உண்டு.
லிங்கம் தரிசனத்தின் பயன்கள்
தற்பொழுது
அண்ணாமலை என்று அழைக்கப்படும்
மலை பல்வேறு காலங்களில் பலவிதமான உருவத்தில் இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த
மலை கிருதாயுகத்தில் அக்னியாகவும்,
தீர்த்தயுகத்தில்
மாணிக்க
கல்லாகவும், துவாபரயுகத்தில்
தங்கமாகவும், தற்பொழுது
இக்கலியுகத்தில் வெறும் கல்லால்
உருவெடுத்த மலையாகவும் விளங்குகிறது என நம்பபடுகிறது. அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அஸ்டலிங்கம்
என எட்டு வித லிங்கங்கள் உள்ளன.
இவைகள் ஓவ்வொன்றும் ஓவ்வொரு திசையை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. ஓவ்வொரு லிங்கமும்
உலகில் இருக்கும் வெவ்வேறு திசைகளை
குறிக்கின்றது. இவ்வெட்டு லிங்கங்களின் பெயர்கள்
1. இந்திரலிங்கம்,
2. அக்னிலிங்கம்,
3. யமலிங்கம்,
4. நிருதிலிங்கம்,
5. வருணலிங்கம்,
6. வாயுலிங்கம்,
7. குபேரலிங்கம்,
8. ஈசானியலிங்கம்
என்று
அழைக்கப்படுகிறது.
இவையனைத்து
லிங்கங்களும் மனிதனுடைய ஓவ்வொரு
காலகட்டத்தை குறிக்கின்றது.
அத்துடன் பக்தர்களின் நன்மைக்காக பல நன்மைகளால் அருள்புரிந்து சிறப்பான
வாழ்கை அமைய
வழி செய்கிறது. இவ்வெட்டு
லிங்கங்களும் எட்டு நவகிரகங்களை குறிக்கிறது. இவை வேண்டி
வணங்கும் பக்தர்களுக்கு
பல நன்மைகள் பயக்கும் என்பதில் உண்மையுண்டு என்று நம்புகிறார்கள்.
கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது இந்திரலிங்கம். இந்தலிங்கம் கிழக்கே பார்த்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கம் பூலோக தேவனான இந்திரதேவனால் நிறுவப்பட்டது. சூரியனின் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள லிங்கம் வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும். கிரிவலம் வரும் வழியில் இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம். இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கியுள்ளது. இந்த லிங்கத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இது கிரிவலம் செல்லும் வழியில் இடது புறம் இருக்கும் ஒரே லிங்கம் ஆகும். அக்னிலிங்கத்தை பிராத்தனை செய்யும் பக்தர்கள் நோயின்றி முழு ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என நம்பபடுகிறது. இந்த லிங்கத்தின் கிரகம் சந்திரன். மேலும் சந்திரகிரகம் என்பதால் வாழ்க்கையில் வரும் இடஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது என நம்புகிறார்கள். இந்த லிங்கம் தாமரை தெப்பகுளத்திற்கு அருகே உள்ளது.
கிரிவலத்தில் மூன்றாவது லிங்கமாக அமைந்துள்ள லிங்கம் யமலிங்கமாகும். இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கியுள்ளது யமதர்மனால் நிறுவப்பட்ட லிங்கம் என கூறப்படுகிறது. இது செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம். இதனருகில் சிம்ம தீர்த்தம் உள்ள தெப்பகுளம் அமைந்துள்ளது. இதை வேண்டுபவர்களுக்கு பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்என நம்பபடுகிறது.
கிரிவலம் பாதையில் நான்காவதாக உள்ள லிங்கம் நிருதி லிங்கம். இதன் திசை தென்கிழக்காகும். இதனுடைய கிரகம் ராகுவாகும். பூதங்களின் ராஜாவால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது. இதை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாக பிரச்னைகளின்றி வாழலாம்.
கிரிவலம் பாதையில் ஐந்தாவதாக உள்ள லிங்கம் வருண லிங்கம். இதற்குரிய திசை மேற்கு. மலைதரும் வருணதேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இந்த லிங்கத்தை ஆட்சி செய்யும் கிரகம் சனி பகவான். இங்கு வருண தீர்த்தம் என்னும் தெப்பகுளம் உள்ளது. சமூகத்தில் முன்னேற்றமடையவும் கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிராத்தனை செய்ய வேண்டும்.
கிரிவலம் பாதையில் ஆறாவதாக உள்ள லிங்கம் வாயு லிங்கம். இந்த லிங்கம் வடமேற்கு திசையை நோக்கியுள்ளது. வாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இதை ஆட்சி செய்யும் கிரகம் கேதுவாகும். இந்த லிங்கத்தை சேவித்து வந்தால் இருதயம், வயிறு, நுரையிறல், மற்றும் பொதுவாக வரும் நோய்களிலிருந்து காத்து கொள்ளலாம்.
கிரிவலத்தில் உள்ள ஏழாவது லிங்கம் குபேர லிங்கம். வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது. செல்வத்தை வழங்கும் குபேர தெய்வத்தினால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிராத்தனை செய்ய வேண்டும்.
கிரிவலத்தில் உள்ள கடைசி லிங்கம் எசானிய லிங்கம். வடகிழக்கை நோக்கியுள்ள இந்த லிங்கம் எசானிய தேவரால் நிருவப்பட்டது. புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது. இந்த லிங்கத்தை சேவித்து வரும் பக்தர்கள் மன அமைதியுடனும், அனைத்து காரியங்களிலும் ஜெயம் கொண்டு திகழ்வார்கள்.
மலையை வலம் வரும் அண்ணாமலையார்
ஒவ்வொரு பெளர்ணமி தினத்தன்றும்இரவில்
பக்தர்கள் திருவண்ணாமலையில் மலையைச் சுற்றி கிரிவலம் வருகின்றனர். 16 கிலோ மீட்டர்
தூர சுற்றளவுள்ள் இந்த கிரிவலத்தை பக்தர்களைப் போன்று அண்ணாமலையாரும் திருவீதி
உலாவாக ஆண்டுக்கு இருமுறை வலம் வருகிறார்.
1. கார்த்திகை தீபத்திருநாளின் மறுநாள்
2. தை மாதம் மாட்டுப்பொங்கல்
இந்த 2 நாட்களிலும் அதிகாலை
சாமி கிரிவலம் செல்கிறார்.
திருமஞ்சன கோபுர
வீதியின் கடைசியில் உள்ள குமர கோவிலில் இந்த 2 நாள் இரவிலும் தங்கி அதிகாலையில்
அபிஷேகம் முடிந்தவுடன் சாமி கிரிவலம் புறப்படுகிறார். வழியில் 25 முதல் 30
இடங்களில் மண்டகப்படி நடைபெறும்.
ஐந்தெழுத்து மந்திரம்
சிவன் ஐந்து எழுத்தின் வடிவின்ன் எப்படித் தெரியுமா?
திருவடொயில் - ந
உதரத்தில் - ம
தோளில் - சி
முகத்தில் - வா
முடியில் - ய