Friday, February 24, 2012

தை மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிபாடு மற்றும் விரதங்கள்!

சாவித்ரி கவுரி விரதம் : தை மாதம் 2-ஆம் நாள் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது. சிவனார் தனக்கருளிய இந்த விரதத்தை, தருமருக்கு போதித்தார் மார்க்கண்டேயர். விரத நாளன்று அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும். அதன்பின், குயவர் வீட்டுக்குப் போய் அவரது சக்கரத்தில் இருந்து மண்ணை எடுத்துக் கொண்டு வர வேண்டும். அந்த மண்ணால் சாவித்ரி தேவி வடிவம் செய்ய வேண்டு...ம். பிறகு மவுன விரதம் பூண்டு முறைப்படி பூஜை செய்து, ஒன்பது முடிகள் போட்ட நோன்புக் கயிற்றைக் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 9 நாட்கள் பூஜித்து, 9-வது நாளன்று மலையில் பூஜையை முடிக்க வேண்டும். பூஜையை நிறைவு செய்யும்போது ஒன்பது ஜோதி முறங்களில்.. ஒவ்வொன்றிலும் ஒன்பது வெற்றிலை பாக்கு - ஒன்பது மஞ்சள் கிழங்குகள் - ஒன்பது பழங்கள் என வைக்க வேண்டும். அதன் பிறகு சுமங்கலிகளை வரவழைத்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவற்றைத் தந்து ஒருவருக்கு ஒரு ஜோடி முறம் தந்து அவர்களை வலம் வந்து வணங்கி, வழியனுப்ப வேண்டும். அதன் பிறகே உண்ண வேண்டும். நீண்ட ஆயுள், செல்வம், சந்தான பாக்கியத்தையும் அருளக் கூடியது இந்த விரதம்.


பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்பதன் பொருள் தெரியுமா?


ஒரு செயலைத் துவங்கினால் அதை நல்லபடியாக முடிக்க வேண்டும். இதற்கு நல்ல திட்டமும் மனஉறுதியும் தெய்வ பலமும் வேண்டும். திட்டமிடாமல், மன உறுதியும் இல்லாமல் ஒரு செயலைத் துவங்கினால் அதை முடிக்க முடியாமல் திண்டாடுவோம். அப்போது, பலரும் பலவிதமாக ஆலோசனை சொல்லி குழப்புவர். அப்போது, செயலைத் தொடங்கியவருக்கு அங்கும் இங்கும் தாவும் குரங்கு போன்ற மனந...ிலை ஏற்பட்டு, எடுத்த செயலை முடிக்காமலேயே விட்டு விடுவார்கள். ஒரு காரியத்தைச் செய்யத் துவங்குவது என்பதை பிள்ளையார் பிடிப்பது என்றும், அது சரி வர நடக்காமல் போனால் அங்குமிங்கும் தாவும் குரங்காய் முடிந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம். இதன் மற்றொரு அர்த்தம் எந்த ஒரு வழிபாட்டையும் பிள்ளையாரின் துவங்கி ஆஞ்சநேயரில் முடிக்க வேண்டும் என்பதே. நவக்கிரகங்களால் பிடிக்கப்பட முடியாத இருவர் ஆஞ்சநேயரும், பிள்ளையாரும் மட்டுமே. எனவே இந்த இரு தெய்வங்களை வழிபட்டாலேயே நவக்கிரக தோஷங்களிலிருந்து விடுபடலாம்.

பைரவ வழிபாடு : தை மாதத்தில் முதலில் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பைரவரை வடை மாலை சாற்றி வழிபடுவதால், சகல நலன்களும் உண்டாகும்.


வீரபத்திர வழிபாடு : மங்கலவாரம் எனப்படும் செவ்வாய்க் கிழமை தோறும் ஒரு வருட காலம் வீரபத்திரரை வழிபட, வல்வினைகள் நீங்கும். வருடம் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், தை மாதத்தில் வரும் செவ்வாய்க் கிழமைகளிலாவது இந்த விரதம் இருப்பது சிறப்பு. இதனால், நீங்காத தடைகள் நீங்கும். பயமும் தீவினைகளும் நம்மைவிட்டு விலகும். கிரக பாதிப்புகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும் அற்புத வழிபாடு இது.
தெய்வம் நின்று கொல்லும் என்பதன் காரணம் என்ன?

இறைவனின் பரமகருணையே இதற்குக்காரணம். எப்படியும் ஒருவன் நல்வழிக்கு திரும்பவேண்டும் என்பது தான் இறைவனின் திருவுள்ளம். இரணியனைக் கூட, நரசிம்மப்பெருமான், இருகூறாக்குவதற்கு முன், துவேஷ உணர்வு உதட்டளவில் இருந்தால் விட்டு விடலாம். உள்ளத்து அளவில் இருந்தால் தான் கொல்ல வேண்டும் என்று எண்ணினாராம். தீர்ப்பு நியாயமானதாக இருக்கவேண்டும் என்பதற்காக நாம் திருந்துவதற்கு தரும் வாய்ப்பு தான் காலம். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பார்களே! அதுபோல, காலம் உள்ளபோதே நல்வழியை நாடி வரவேண்டும் என்பது தான் இறைவன் திருவுள்ளம். அதனால் தான், தெய்வம் நின்று கொல்கிறது.
தெய்வத்திற்கும் தண்ணீருக்கும் உள்ள ஒற்றுமை தெரியுமா?
தாயைக் கழித்தாலும் தண்ணீரைக் கழிக்காதே என்று கூறுவார்கள். தண்ணீரை வீணாக்குபவர்கள் பெரிய சிரமத்திற்கு ஆளாவார்கள் என்பது பெரியோர்கள் கண்ட உண்மை. தண்ணீர் தெய்வத்திற்கு சமமானது என்பததை இப்படி விளக்குகிறார்கள். தண்ணீர் உயரமான இடத்திலிருந்து தாழ்வான இடத்தை நோக்கியே வரும். அதே போல் கடவுளும் உயரமான இடத்திலிருந்து அவதாரம் என்று சொல்லி கீழ் நோக்கி வருகிறா...ர். தண்ணீர் எந்த நிறத்தில்கலக்கிறதோ அதே நிறத்தைப் பெறுகிறது. அதே போல் கடவுளும் எந்த அவதாரத்தை எடுக்கிறாரோ அந்த நிறத்தைக் காட்டுவார்.

தண்ணீருக்கு நிறம், மணம், குணம் கிடையாது. அதேபோல அருவமான கடவுளுக்கும் நிறம்,மணம், குணம் கிடையாது. உணவுப் பொருளை உற்பத்தி செய்ய உதவுவது தண்ணீர்தான். அது தானும் உணவாவது போல இறைவன் பக்தியின் விளை நிலமாகவும், பக்திப் பொருளாகவும் ஆகிறான். தண்ணீர் நாம் எடுக்கும் பாத்திரத்தின் அளவுக்கே நிறைவது போல இறைவனும் பக்தியின் அளவுக்கே பலன் தருகிறான். தண்ணீருக்கு ஏழை,பணக்காரன், ஆண், பெண், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்றபேதம் கிடையாது. கடவுளுக்கும் இந்தவிதமான பேதங்கள் கிடையாது என்பதை நாம் அறிவோம். தண்ணீரை சர்வதேவதா ஸ்வரூபம் என்கிறது வேதம்.
உடற்கூறு தத்துவங்கள் 96
******************************
1. பூதம் ————– ——————- 5
2. புலன்கள்———– —————— 5
3. பொறிகள் ———- ————— 5
... 4. கன்மேந்திரியங்கள் ———–5
5. ஞானேந்திரியங்கள்— ——— 5
6. கரணம் ———– —————- 4
7. அறிவு —————————- 1
8. நாடிகள் ———————— 10
9. வாயுக்கள் ——————— 10
10. ஆசயங்கள்– ——————– 5
11. கோசங்கள்—- —————— 5
12. ஆதாரம் ——- —————– 6
13. தோசம் ——— —————–3
14. மலம் ————- —————-3
15. மண்டலம் ——– —————3
16. ஈடனை ———– —————3
17. குணம் ————— ———— 3
18. வினை ————– ———— 2
19. விகாரம் ———— ———— 8
20. அவஸ்தை ———- ———–5
———————
மொத்தம் 96
கரணம் 4
**************************
1. மனம்:                 இது வாயுவின் கூறாக அலைந்து விசையங்களை நினைக்கும்.
2. புத்தி:                        இது தேயுவின் கூறாக ரூப பேதங்களை தெரிவிக்கும்.
3.அகங்காரம்: இது பிருதிவியின் கூறாக விசையங்களை               கொண்டெலுப்பும்.
4. சித்தம்:                    இது அப்புவின் கூறாக விசையங்களை பற்றசெய்யும்.

7) அறிவு 1
************************
உள்ளம்: இது ஆகாயத்தின் அம்சமகையல் உச்சியில் நின்று சகல விசயங்களையும் நோக்கும். பகுத்தறிவிக்கும்.
சிந்தனைத் துளிகள்

வணங்கத்தக்கவர்கள் தாயும் , தந்தையும்
வந்தால் போகாதது ------- - புகழ் . பழி
போனால் வராதது மானம் . உயிர்
... தானாக வருவது இளமை , முதுமை
நம்முடன் வருவது பாவம் , புண்ணியம்
அடக்க முடியாதது ஆசை , துக்கம்
தவிர்க்க முடியாதது பசி , தாகம்
நம்மால் பிரிக்க முடியாதது பந்தம் , பாசம்
அழிவைத் தருவது பொறாமை , கோபம்
எல்லோருக்கும் சமமானது பிறப்பு , இறப்பு
கடைத்தேற வழி உண்மையும் , உழைப்பும்
ஒருவன் கெடுவது பொய்சாட்சி , செய்நன்றி மறப்பது
வருவதும் போவதும் இன்பம் , துன்பம்
மிக மிக நல்ல நாள் இன்று
மிகப் பெரிய வெகுமதி மன்னிப்பு
மிகவும் வேண்டாதது வெறுப்பு
மிகப் பெரிய தேவை சமயோஜித புத்தி
மிகக் கொடிய நோய் பேராசை
மிகவும் சுலபமானது குற்றம் காணல்
கீழ்த்தரமான விஷயம் பொறாமை
நம்பக்கூடாதது வதந்தி
ஆபத்தை விளைவிப்பது அதிக பேச்சு
செய்யக் கூடாதது தவறுகள்
செய்ய வேண்டியது உதவி
விலக்க வேண்டியது விவாதம்
உயர்வுக்கு வழி உழைப்பு
நழுவ விடக் கூடாதது வாய்ப்பு