வரவேற்பு அறை:
கிழக்கு ஈசானியம், தெற்கு அக்னி, தெற்கு, மேற்கு வாயுமூலை, வடக்கு வாயுமூலை, வடக்கு, வடக்கு ஈசானியம்.
அலுவலக அறை:
தெற்கு அக்னி, தெற்கு நிருதி, மேற்கு நிருதி.
பூஜை அறை:
... கிழக்கு, கிழக்கு ஈசானியம், வடக்கு, வடக்கு ஈசானியம்.
படிக்கும் அறை:
வடக்கு
சமையல் அறை:
கிழக்கு அக்னி மூலை, தெற்கு அக்னி மூலை, மேற்கு வாயு மூலை, வடக்கு வாயு மூலை.
உணவு உண்ணும அறை / டைனிங் ஹால்:
வடக்கு, கிழக்கு, தெற்கு.
படுக்கை அறை:
தெற்கு, தெற்கு நிருதி மூலை, மேற்கு நிருதி மூலை, மேற்கு, வடக்கு வாயு மூலை.
ஸ்டோர் ரூம்:
தெற்கு, மேற்கு, தெற்கு நிருதி மூலை, மேற்கு நிருதி மூலை.
குளியல் அறை:
கிழக்கு அக்னி மூலை, தெற்கு அக்னி மூலை, தெற்கு, மேற்கு, வடக்கு, மேற்கு வாயு மூலை, வடக்கு வாயு மூலை.
கழிவறை:
கிழக்கு அக்னி மூலை, தெற்கு அக்னி மூலை, தெற்கு, மேற்கு, வடக்கு, வடக்கு வாயு மூலை, மேற்கு வாயு மூலை.
தாழ்வாரம், வராண்டா:
வடக்கு ஈசானியம், கிழக்கு ஈசானியம்.
கிணறு, போர்வெல்:
கிழக்கு, கிழக்கு ஈசானியம், வடக்கு, வடக்கு ஈசானியம்.
சம்ப் / மேல்நிலைத் தொட்டி:
கிழக்கு, வடக்கு, கிழக்கு ஈசானிய மூலை, வடக்கு ஈசானிய மூலை.
செப்டிக் டேங்க்:
வடக்கு, கிழக்கு.
வாஸ்து சாஸ்திரம் – மனையிடம் எப்படி தேர்தெடுப்பது:
பொதுவாக மனையிடம் நீள் சதுரம், சதுரமாக அமைவது நன்மை தரும். அவ்வாறன்றி ஒருபக்கம் நீண்டு, குறைந்து, 4 மூலைக்குப் பதில் மூலைகள் அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கும் மனைகள் நன்மை தராது. இவ்வாறான மனைகள் ஒழுங்கற்ற மனைகள் என்பர்.
மனையின் வடக்கு கிழக்குப் பகுதிகள் தாழ்வாகவும், தெற்கு மேற்கு பகுதிகள் சற்று உயர்ந்து மேடாகவும் இருத்தல் வேண்டும். அவ்வாறு இல்லாமல் இருந்தால் உயரத்தை சமன் செய்து சரிசெய்ய வேண்டும்.
நாம் தேர்வு செய்த மனை கோயில் மனையாகவோ, கோயில் சன்னதியின் மைய அமைப்பிற்கு எதிர் நிற்கும் மனையாகவோ இருக்கக் கூடாது.
தற்கொலை நடந்த இடம், பிணம் புதைக்கப்பட்ட இடமாகவோ இருக்கக் கூடாது.
கால்வாய், ஆறு, நதிகளை ஒட்டிய நெருக்கமான மனையாக இருக்கக் கூடாது.
மனையின் வடக்கிலும் கிழக்கிலும் மலைகள் இருந்தால் அந்த இடத்தைத் தவிர்க்க வேண்டும்.
தெற்கிலும் மேற்கிலும் ஆறுகள், முக்கூட்டு ரோடு, கோயில் நந்தவனத்தை ஒட்டிய மனைகள், கோயில் கோபுர நிழல் விழும் மனைகளைத் தவிர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment