Thursday, January 30, 2014

தமிழ் மருத்துவம்


எள்
     மனித முதலில் எண்ணெய்ப் பொருளாகப் பயன்படுத்தியது எள் விதைகளைத்தான். உலகம் முழுவதும் உணவுப்பொருளாகவும், மருத்துவப்பொருளாகவும் பயன்படும் பெருமை மிக்கது எள். இதிலுள்ள சத்திக்க்களை பார்ப்போம்.
      
     ஆசியபகுதிகளான பர்மா, சீனா, இந்தியா போன்ற நாடுகளில் அதிகமாக விளையும் பொருள்களில் எள்ளும் ஒன்று. எள்ளின் தாவர குடும்பம் “பெடலெயேசியேஇதன் அறிவியல் பெயர்சீசாமம் இண்டிகம்வெள்ளை, கருப்பு, பழுப்பு என மூன்ரூ நிறங்களில் எள் விளைகிறது.

     ஆரோக்கியம் வழங்கும் சத்துப்பொருட்கள், தாது உப்புக்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள் வைட்டமின்கள் எள்ளில் காணப்படுகிறது.எள் விதைகள் அதிக ஆற்றல் தரும் உணவுப் பொருளாகும். 100கிராம் எள் விதைஉஇல் 573 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. இதிலுள்ள அதிகப்படியான ஆற்றலுக்கு காரணம் கொழுப்புச் சத்துதான். “ஆவியக் அமிலம்எனப்படும் கொழுப்பு அமிலம் எள்ளில் சரிபாதி அளவு காணப்படுகிறது. இது கெட்ட கொழுப்புகளான எல்.டி.எல் கொழுப்பை இரத்த்த்தில் குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.

     சீசமோல். சீசமினால், பியுரைல் மீதேன்தையோல், குவாஜகால். பரனியோல், வினைல்குவாகால், டீகாடியானால் போன்ற ஆரோக்கியம் வழங்கும் மூலக்கூறுகள் எள் விதையில் கணிசமாக உள்ளது. இவை நோய் எதிர்ப்புப் பொருள்களாக செயல்படுபவை. உடலுக்கு தீங்கு தரும் பிரி – ரேடிக்கல்களை விரட்டி அடிக்க வல்லவை.

     வைட்டமின்களும், தாது உப்புக்களும் அதிக அளவில் காணப்படுகின்றன. பி-குழும வைட்டமின்களான நியாசின், போலிக் ஆசிட், தயாமின், பைரிடாக்சின், ரிபோபிலேவின் போன்றவையும் சிறந்த அளவில் உள்ளன. 97 மைக்ரோகிராம் போலிக் ஆசிட் 100 கிராம் எள்ளில் உள்ளது. இது டி.என்.ஏ வளர்ச்சி மாற்றத்திற்கு அவசியமான வைட்டமினாகும். நியாசின் வைட்டமின், இரத்த்த்தில் கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்தும் . மேலும் மூளையின் சிறப்பான செயல்பாட்டிற்கு உதவுவதோடு, கவலை மற்றும் நரம்பு வியாதிகளைத் தடுக்கும் ஆற்ரலும் இதற்கு உண்டு.
கால்சியம், இரும்பு, மாங்கனீசு துத்தநாகம், மக்னீசியம், செலினிய, தாமிரம் போன்ற அத்யாவசிய தாதுப்பொருட்களும் மிகுதியாகவே காணப்படுகின்றன. இவை இரத்த சிவப்பணூ உற்பத்தி, நொதுகளின் செயல்பாடு,ஹார்மோன் உற்பத்தி, இதய செயல்பாடு என பல்வேறு பணிகளில் பங்கு வகிக்கும் முக்கிய தாதுக்களாகும். எள்நெய் என்பதே எண்ணெய் எனபப்டுவது, ஆனால் பொதுவாக இதை நல்லெண்ணெய் என்று அழைப்பர். எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. எள் வறண்ட பகுதியிலும் வளரக் கூடியது. இதைப் பயிரிடும்போது ஒருமுறை தண்ணீர்விட்டால் போதும். பிறகு தண்ணீர் விடத் தேவையில்லை. அந்த அளவுக்கு வறட்சியைச் தாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது.


எள்ளின் பயன்பாடுகள்

     மென்று தின்று சுவைக்க்க் கூடிய கொறிக்கும் பண்டங்களில் ஒன்று எள் விதைகள். தனியாகவோ, இதர பருப்புவகைகளுடன் சேர்த்தோ வருத்து சாப்பிடலாம். பெரும்பாலும் எள் விதைகள பதார்த்தங்களாக உருவாக்கி ருசிக்கப்படுகிறது. எள் உருண்டை கிராமங்களில் விரும்பி சுவைக்கப்படும் பண்டமாகும்.

     கேக், கொள்ளுக்கட்டை என பலவித பண்டங்கள் தயாரித்து சுவைக்கிறார்கள். இட்லி  உள்ளிட்ட பல்வேறு டிபன் உணவுகளுக்கு சுவை மிகுந்த துணைப் பதார்த்தமாக எள்ளுப்பொடியை பயன்படுத்துகிறார்கள். இதனை நீண்டநாள் வைத்துப் பயன்படுத்தலாம். பிஸ்கட், கேக் சாலட் ரொட்டி என பல பதார்த்தங்களிலும் எள் சேர்க்கப்படுகிறது.


எள்ளின் மருத்துவகுணங்கள் 



கறுப்பு எள் அதிக மருத்துவப் பண்புகள் கொண்டது. இதில் அதிகளவு சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது.

வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
எள்ளின் இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வழுவழுவென்று பசை இறங்கும். இந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் கண்கள் நன்கு ஒளிபெறும். கண் நரம்புகள் பலப்படும்
இதன் பூ கண்நோய்களை குணப்படுத்தும்.

இதன் இலைகளை நன்கு மசிய அரைத்து கட்டிகள் மேல் பூசி வந்தால் கட்டிகள் மறையும்.

இதன் காயையும், தோலையும் உலர்த்திச் சுட்டு சாம்பலாக்கி ஆறாத புண்கள் மீது தடவினால் புண்கள் ஆறும்.

எள்ளின் விதையை வெல்லப் பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிட்டால் அல்லது எள்ளு விதையை இலேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டாலும் மூல நோய் குறையும்.

தோலில் சொறி, சிரங்கு புண்கள் உள்ளவர்கள் எள்ளு விதையை அரைத்து மேல் பூச்சாகப் பூசினால் தோல் நோய்கள் அகலும்.

நல்லெண்ணெயுடன் சம அளவு எலுமிச்சைச் சாறு கலந்து உடலில் பூசிக் குளித்து வந்தால் தோல் நோய்கள் அணுகாது.

கறுப்பு எள்ளை நன்கு காயவைத்து, இலேசாக வறுத்துப் பொடி செய்து அதனை நல்ல சூடான நீரில் போட்டு 2 மணி நேரம் ஊறவைத்து அதனுடன் தேவையான அளவு பால் மற்றும் பனைவெல்லம் சேர்த்து காலையும் மாலையும் அருந்தி வந்தால் இரத்த சோகைவிரைவில் மாறி உடல் வலுப்பெறும்.

வயிற்றுப் போக்கு உள்ளவர்கள் எள்ளை வறுத்து பொடியாக்கி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து நெய் கலந்து தினமும் மூன்று வேளை என ஆறு நாட்கள் சாப்பிட்டு வந்தால் காலரா மற்றும் தொற்றுநோயால் உண்டாகும் வயிற்றுப்போக்கு நீங்கும்

எள்ளின் இலையையும் வேரையும் அரைத்துத் தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறவைத்து தலை குளித்து வந்தால் முடி உதிர்தல் குணமாகும்.

உடல் சூடு, தலைப் பாரம் குறையும்.

No comments: