Thursday, January 23, 2014

சிந்திக்க சில

நம்பிக்கை மொழிகள்

ஆரோக்கியமுள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும், நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் இருக்கும் – ஹால்டேன்

நம்பிக்கை மனிதனுக்கு நேரும் எல்லா நோய்களுக்கும் ஒரு மலிவான மருந்து - கெளலி

நம்பிக்கை பயத்தைப் போக்கும் ஒரு சாதனம் – ஜேம்ஸ்

ஒவ்வொரு தடவையும் விழுவது மீண்டும் எழுவதற்கே என்று நம்புங்கள் – ஷேக்ஸ்பியர்

பணத்தின் மீது நம்பிக்கை வைக்காதே; நம்பிக்கை மீது உன் பணத்தை வை – ஹோம்ஸ்

நம்பிக்கையை பிறர் தரமுடியாது. அது உள்ளத்திலேயே உற்பத்தியாக வேண்டும் -  காந்தியடிகள்

நம்பிக்கை இழந்தவன் பிணத்திற்கு ஒப்பாவான் -  வைட்டியர்

நம்பிக்கை என்பது ஒரு நாளில் உதிர்ந்து விடும் பூவாக இருந்து விடக்கூடாது. மேலும், மேலும் மலரை உருவாக்கும் செடியாக இருக்க வேண்டும் – அரிஸ்டாட்டில்

நம்பிக்கைதான் ஏழையை வாழவைக்கும் -  சாணக்கியர்

நம்பிக்கை எண்ணற்ற எதிரிகளை வென்று விடும் – லாங்ஃபெல்லோ

***
வாழ்க்கை

வாழ்க்கை ஒரு அன்பு அனுபவிப்போம்
வாழ்க்கை ஒரு அழகு அதிசயப்போம்
வாழ்க்கை ஒரு ஆத்மா உணர்ந்திடுவோம்
வாழ்க்கை ஒரு இலக்கு எட்டிடுவோம்
வாழ்க்கை ஒரு இரகசியம் வெளிப்படுத்திடுவோம்
வாழ்க்கை ஒரு உறுதிமொழி நிறைவேற்றுவோம்
வாழ்க்கை ஒரு விளையாட்டு விளையாடுவோம்
வாழ்க்கை ஒரு வாய்ப்பு பயன்படுத்துவோம்
வாழ்க்கை ஒரு வெகுமதி ஏற்போம்
வாழ்க்கை ஒரு சவால் சந்திப்போம்
வாழ்க்கை ஒரு சாகசம் துணிந்து நிற்போம்
வாழ்க்கை ஒரு சோகம் எதிர்கொள்வோம்
வாழ்க்கை ஒரு துன்பம்ம் வெண்று நிற்போம்
வாழ்க்கை ஒரு கடமை செய்து முடிப்போம்
வாழ்க்கை ஒரு பாடல் இசைப்போம்
வாழ்க்கை ஒரு புதிர் நிறைவு செய்வோம்
வாழ்க்கை ஒரு போராட்டம் போராடுவோம்
வாழ்க்கை ஒரு பயணம் நிறைவு செய்வோம்
வாழ்க்கை ஒரு சவால் எதிர் கொள்
வாழ்க்கை ஒரு வரம் ஏற்றுக்கொள்
வாழ்க்கை ஒரு துணிச்சல் வீரம் கொள்
வாழ்க்கை ஒரு போர் வெற்றிக் கொள்
வாழ்க்கை ஒரு வகைச் சுவை ருசித்திரு
வாழ்க்கை ஒரு தொடர்கதை தொடர்ந்து படித்திரு
வாழ்க்கை ஒரு சோதனை பார்த்த்துக் கொள்
வாழ்க்கை ஒரு கடமை முடித்துக்கொள்
வாழ்க்கை ஒரு இரகசியம் வெளிக்கொணர்
வாழ்க்கை ஒரு ஒப்பந்தம் நிறைவேற்று
வாழ்க்கை ஒரு மயக்கம் க்வனம் வை
வாழ்க்கை ஒரு வியப்பு இரசித்திரு
வாழ்க்கை ஒரு வளர்மதி வளர்ச்சிகொள்
வாழ்க்கை ஒரு விண்மீன் ஒளி சிந்து
வாழ்க்கை ஒரு தேவை தெரிந்துகொள்
 வாழ்க்கை ஒரு வாய்ப்பு பயன்படுத்து
வாழ்க்கை ஒரு வழித்தடம் பார்த்துச்செல்
வாழ்க்கை ஒரு மனச்சுகம் மகிழ்ச்சி கொள்
வாழ்க்கை ஒரு மகத்துவம் மதித்திரு
வாழ்க்கை ஒரு பூரணம் புரிந்து கொள்
வாழ்க்கை ஒரு போதனை மலர்ச்சி கொள்

***
 
சிந்திக்க செயல்பட
பொறுப்பு புகழ் தரும்
இறுமாப்பு ஏமற்றம் தரும்
கண்ணுக்கு இமை காவல்
கணவனுக்கு மனைவி காவல்
பொழுதைப் போக்கத் தூங்காதே
எதையும் தீர விசாரிப்பது நல்லது
ஆற்றலில் நம்பிக்கை வைத்தல் வேண்டும்
பிறர் உன்னைப் புகழ்தல் வேண்டும்
நண்பர்களை உயர்த்தப் பாடுபடு
பொய்யும் பலாத்காரமும் இரட்டை சகோதரர்கள்
கோபத்தோடு எழுந்தால் நஷ்ட்த்தோடு உட்காருவாய்
சமுதாயம் வளர்வது பண்பாட்டில்தான்
தன் குற்றத்தை திருத்த முடியாத்துதான் பெருங்குற்றம்
தர்மம் என்பது இறைவன் கட்டளை
மண்ணில் ஈரம் - பயிர் செழிக்கும் மனதில் ஈரம் – அன்பு கொழிக்கும்
செய்தொழில் அவமானமில்லை சோம்பல் தான் அவமானம்
குதிப்பதற்கு முன் குனிந்து பார், முடிப்பதற்கு முன் எண்ணிப்பார்
முறை சரியாக இருந்தால் முடிவும் சரியாகத்தான் இருக்கும்
அகிம்சை மாபெரும் நல்லொழுக்கம், கோழைத்தனம் மாபெரும் கேடு


***
மனிதன் மனிதனாக வாழ...


மிகவும் மதிக்கப்பட
வேண்டியவர்கள்                -    தாய், தந்தை
மிகமிக நல்ல நாள்             -    இன்று
மிகவும் வேண்டியது            -    பணிவு
மிகவும் வேண்டாத்து            -    வெறுப்பு
மிகப்பெரிய தேவை             -    நம்பிக்கை
மிகக் கொடிய நோய்            -    பேராசை
மிகவும் சுலபமானது            -    குற்றம் காணல்
கீழ்த்தரமான விஷயம்           -    பொறாமை
நம்பக்கூடாதது                  -    வதந்தி
ஆபத்தை விளைவிப்பது         -    அதிகப் பேச்சு  
செய்யக்கூடாதது                -    நம்பிக்கை துரோகம்
செய்யக்கூடியது                 -    உதவி
விலக்க வேண்டியது            -    சோம்பேறித்தனம்
உயர்வுக்கு வழி                 -    உழைப்பு
நழுவவிடக்கூடாதது             -    வாய்ப்பு
பிரியக்கூடாதது                 -    நட்பு
மறக்க்க்கூடாதது                -    நன்றி
வேலை நேரம்                  - வெற்றியின் விலை
சிந்தனை நேரம்                 - அறிவின் ஊற்று
தொழும் நேரம்                  - ஞானத் திறவுகோல்
விளையாடும் நேரம்             - இளமை ரகசியம்
வாசிக்கும் நேரம்                - உயர்வின் ஏணி
நன்மை செய்யும் நேரம்         - மகிழ்ச்சியின் வழிகாட்டி
குடும்பத்துக்கான நேரம்         - உறவின் பொக்கிஷம்
ஓய்வின் நேரம்                 - புது வலிமைக்கு வாசல்
மகிழும் நேரம்                  - வாழ்வுக்கு ஊக்கம்
பயண நேரம்                    - இதமான அனுபவம்


 ***

உங்கள் சிரிப்பு எப்படி?
ஓயாமல்             சிரிப்பவன்      -    பைத்தியக்காரன்
ஓடவிட்டு            சிரிப்பவன்      -    வஞ்சகன்
இடம் பார்த்து        சிரிப்பவன்      -    எத்தன்
குழைந்து             சிரிப்பவன்      -    கோமாளி
இன்பத்தில்           சிரிப்பவன்      -    ஏமாளி
கண்பார்த்துச்         சிரிப்பவன்      -    காரியவாதி
யாரும் காணாமல்    சிரிப்பவன்      -    கஞ்சன்
கற்பனையில்        சிரிப்பவன்      -    கவிஞன்
வெற்றியில்          சிரிப்பவன்      -    வீரன்
நினைவோடு         சிரிப்பவன்      -    அறிஞன்

***


உணவைக் குறை           அதிகமாக கடித்துண்
சவாரியைக் குறை          அதிகமாக நட
உடையைக் குறை          அதிகமாக குளி
கவலையைக் குறை        அதிகமாக வேலை செய்
சோம்பலைக் குறை         அதிகமாக விளையாடு
பேசுவதைக் குறை          அதிகமாக சிந்தி
திரிவதைக் குறை                அதிகமாக தூங்கு
வீண் செலவைக் குறை           அதிகமாக தானம் செய்
திட்டுவதைக் குறை         அதிகமாக சிரி
உபதேசத்தைக் குறை       செயலை அதிகரி


 ***

வேண்டும்
மனதில் உருதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கினபொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
வானகமிங்கு தெபட வேண்டும் – மகாகவி பாரதியார்

No comments: