Thursday, January 23, 2014

ஆண்மீகம்





வினைதீர்க்கும் விநாயகர்

சித்தி புத்தி என்ற இரு மனைவிகளூடம் அமர்ந்திருக்கிறார்

பொதுவாக யானை முகத்துடன் தான் விநாயகர் காட்சியளிப்பார். ஆனால் சிதம்பரத்தில் உள்ள கோவிலில் மனிதமுகத்துடன் நரமுக விநாயகர் என்ற பெயருடன் காட்சி அளிக்கிறார்.

பக்தர்களின் குறைகளை செவிசாய்த்துக் கேட்டு, அதை உடனுக்குடன் நிறைவேற்றுவதால் இந்த விநாயாகருக்கு சொற்கேட்டான் பிள்ளையார் என்ற பெயர் உண்டாயிற்று. இந்த விநாயர் சிவகங்கை மாவட்ட்த்திலுள்ள பள்ளத்தூர் வேலங்குடியில் கோவில் கொண்டுள்ளார்.





வெண்ணெய் சாப்பிடும் காரணம்

     கண்ணனுடைய இளம் பருவத்து தோழர்களில் மதுமங்களன் என்ற சிறுவன் மிகவும் ஒல்லியாக இருப்பான். நிறைய பால், தயிர், வெண்ணெய் சாப்பிட்டால் தான் உடல் பலம் பெற முடியும் என கண்ணன் கூறிய போது,எங்கள் வீடுகளில் கடைந்து எடுக்கப்படும் வெண்ணெய் முழுவதும் கம்சனிடம் கொடுக்க வேண்டும் என்பது கட்டளை என்று தன் இயலாமையை கூறினான்.இந்த ஆநீதியை கண்ணால் பொறுக்க முடியவில்லை.கோபியரின் இல்லங்களில் வெண்ணெய் இருந்தால் தானே கம்சனிடம் அனுப்புவார்கள். தன் நண்பர்களுடன் வீடு, வீடாகச் சென்று வெண்ணெய், பால் தயிர் என திருடி உண்ண ஆரம்பித்தான் கண்ணன்.


சிவனின் பஞ்ச தாண்டவத் தலங்கள்

ஆனந்த்த் தாண்டவம்       -    தில்லை பேரூர்
அஜாபா தாண்டவம்         -    திருவாரூர்
சுந்தர தாண்டவம்           -    திருவாலவாய்
ஊர்த்துவத் தாண்டவம்      -    அவிநாசி
பிரம்ம தாண்டவம்          -    திருமுருகன் பூண்டி


சிவனின் பஞ்ச சபைகள்

இரத்தின சபை             -    திருவாலங்காடு
கனக சபை                 -    சிதம்பரம்
இரஜித் சபை               -    மதுரை
தாமரை சபை              -    திருநெல்வேலி
சித்திர சபை               -    திருக்குற்றாலம்



சிவனின் எண்குணங்கள்
1.       தன்வயத்தனாதல்
2.       தூய உடம்பின்ன் ஆதல்
3.       இயற்கை உணர்வின்ன் ஆதல்
4.       முற்றும் உணர்தல்
5.       இயல்பாகவே பாசங்கள் நீங்குதல்
6.       பேர்ருளுடமை
7.       முடிவில்லா ஆற்றலுடைமை
8.       வரம்பில் இன்பமுடைமை



சிவனின் ஐந்தொழில்கள்
1.       மறைத்தல்
2.       படைத்தல்
3.       அளித்தல்
4.       அருளல்
5.       அழித்தல்


சிவனின் எண் உருவங்கள்
1.       நிலம்
2.       நீர்
3.       நெருப்பு
4.       உயிர்
5.       விசும்பு
6.       நிலா
7.       பகலோன்
8.       புலன்


ஏழரைச் சனி

     ஒருவனின் ஜென்ம ராசியில் இரண்டரை ஆண்டும், அந்த ராசிக்கு முந்தைய ராசியில் இரண்டரை ஆண்டும், ஜென்ம ராசிக்கு அடுத்த ராசியில் இரண்டரை ஆண்டும், என ஏழரை ஆண்டுகாலம் சனி ஒருவரைப் பிடித்து சஞ்சாரம் செய்வதை ஏழரைச் சனி என்று குறிப்பிடுகிறார்கள்.


ஆஸ்திகன் யார்? நாஸ்திகன் யார்?

     வழிப்போக்கருக்களுக்கு நிழலும் தராமல், எளிதில் பறித்து உண்ணவும் வகையில்லாமல் பழத்தைக் குலை குலையாகச் சுமந்து நிற்கும் பேரீட்சை மரம் போல இருந்து என்ன பயன்?

     பிறர் துயர் கண்டு தானே போய் கொடுக்கும் குணமுள்ளவனே ஆஸ்திகன், மற்றவர்களுடைய துயரங்களை உணரமுடியாதவனே நாஸ்திகன்.

-          காந்தியடிகள்




எது? எதற்கு?

தனம் எதற்கு                    -    தானம் செய்வதற்கு
வறுமை எதற்கு                 -    வாய்மையில் நிற்பதற்கு
அதிகாரம் எதற்கு                -    அரிய சேவை செய்வதற்கு
சொற்பலம் எதற்கு               -    சொல்லித் தருவதற்கு
குணம் எதற்கு                   -    குள்ளுப் புகழுக்கு
பூசைகள் எதற்கு                 -    புண்ணியம் தேடுவதற்கு
ஆலயம் எதற்கு                 -    அரி அவனைக் காண்பதற்கு
இரக்கம் எதற்கு                  -    இருவினை அழிப்பதற்கு
இறைவனை நினைப்பதி எதற்கு   -    இப்பிறப்பை அடைவதற்கு

    

No comments: