Saturday, January 25, 2014

ஆண்மீகம்



பூஜை அறையில் வைக்கும் சாமி படங்கள்
    பூஜை அறையில் பெரிய சாமி படங்கள் வைக்கவேண்டாம்.அதிக தெய்வ உருவங்கள் இடம் பெறச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். விநாயகர், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி படங்களுடன் அவரவருக்கு விருப்பமான இஷ்டகுலதெய்வங்களையும் வைக்க வேண்டும்.

***

வீட்டில் வளர்க்க கூடாதவை
     வீட்டில் வளர்க்க கூடாத மரங்கள் – ஆலமரம், அகத்தி, புளியமரம் கருங்காலி மரம், எருக்கஞ்செடி, பருத்தி, நந்தியா போன்ற மரங்களை வளர்க்க கூடாது. வளர்த்தால் செல்வம் வறண்டு வறுமை மேலோங்கும் என்பது ஜதீகம்.

***

சனிக்குரிய எண்
சனி பகவான்க்குரிய எண் 8.இந்த எண்ணின் அதிபதியாக சனி பகவான் புகழ்கிறார். எனவே சனி பகவான் நம்மை அண்டாமல் இருக்க 8 என்ற கூட்டு எண் வருமாறு உள்ள பெயரைத் தவிர்ப்பது நல்லது. ஏற்கனவே அந்த பெயரைக் கொண்டிருந்தால் வேறு கூட்டு எண் வரும்படி, தங்கள் பெயரில் சிறிய மாற்றத்தைக் கொண்டு வரலாம்.

 ***

விளக்கு ஏற்றும் பலன்கள்
     நெய்தீபம்                  -    ஞானம் ஏற்படும்
     நல்லெண்ணைய் தீபம்      -    எமபயம் அணுகாது
     இலுப்பை எண்ணைய்       -    ஆரோக்கியம்
     விளக்கெண்ணெய் தீபம்     -    சகல சம்பத்தும் கிடைக்கும்

இந்த தீபம் அனைத்திற்கும் பருத்தி நூல் திரிப்போட்டு வெண்கல வெளக்கில் தீபமேற்றினால் வீரிய விருத்தியளிக்கும். நாள்தோறும் சிவாலயங்களில் தீபமேற்றி வந்தால் சகல் நன்மைகளும் உண்டாகும்.


***

தலைசிறந்த ஒவ்வொரு வேலையும் முதலில் முடியாத்தாகவே தோன்றும், முயற்சி செய்தால் முழுப்பயன் கிடைக்கும்.

காலமே உன் உயிர். அதை வீணாக்குவது, உன்னையே நீ வீணாக்கிக் கொள்வது போலாகும்.

நாம் சென்ற நடை கொடைக் கூலியாகும்.

கேட்ட்தெல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே.

குற்றத்தை ஒப்புக்கொள்வது நேர்மையின் முதற்படி.

கணவனே மனைவியின் முதல் குழந்தை.

விரும்பிச் செய்யும் வேலைக்கு எதுவும் சுமையாகாது.

ஒருவனது அறிவை அறிய அவனது பேச்சே அளவுகோல்.

உண்மை, நிதானம், சகிப்புத்தன்மை ஆகிய மூன்றும்தா அறிவை வளர்க்கின்றன.

***



இறைவன் நமக்குள் இருந்தே அவதரிக்கிறான்

     அக்னி த்த்துவம் மரக்கட்டையில் அதிகமாக இருக்கிறது. இறை தத்துவத்தை நீ தேடுவாயானல் மனிதனிடம் தேடு. மனிதனிடம் இறைவன் அதிகமாக பிராகாசிக்கின்றன.

     யாரிடம் திடபக்தி பெருக்கெடுத்து ஓடுகிறதோ, யார் இறைவனுக்காக பித்துப்பிடித்த அலைகிறானோ, யார் அவனுடைய பிரேமையில் மூழ்கிக்கிடக்கிறானோ, அந்த மனிதனிடம் இறைவன் நிச்சயம் அவதரிக்கிறான் என்று அறிந்து கொள்.

     இறைவன் எல்லாப் பொருட்களிலும் இருக்கிறான். ஆனால் அவனுடைய சக்தி சில உயிர்களில் அதிகமாக பிரகாசிக்கிறது. சில உயிர்களில் சிறிது குறைவாக வெளிப்படுகிறது.அவதாரங்களில் அவனுடைய சக்தி அதிகமாக வெளிப்படுகிறது. சில நேரங்களில் அந்த சக்தி  நிறைந்து வெளிப்படுவதும் உண்டு. சக்தி தான் அவதரம் எடுக்கின்றது.
    
     இறைவன் மனிதனாக அவதாரம் எடுக்காவிட்டால் வேறு யார்தான் ஆன்மிக உண்மைகளைப் புரிய வைப்பார்கள்? மனிதனுக்கு ஞானம், இவைகளை கொடுக்க இறைவன் மனித உடல் தங்கி வருகிறான். இறைவன் நமக்குள் மறைவாக இருந்து நமக்கு போதிக்கிறான்.
                                                    
                               ஸ்ரீ ராமகிருஷ்ண பரமகம்ஹர் 

***

நெற்றியில் விபூதி, குங்குமம் ஏன்?
     நெற்றியில் திருநீறு, குங்குமம், திருமண், கோபி, சந்தனம் போன்ற சமய அடையாளங்களைத் தரிப்பவர்களை மூதேவி நெருங்க மாட்டாள். அதற்கு காரணம் ஒவ்வொருவருடைய கழுத்துக்கு மேலேயும், சதுர திருத்தி என்ற தேவி, சுற்றிக் கொண்டிருக்கிறாள். அவளை மூதேவி என்று சொல்வார்கள். எவன் ஒருவன் தன் நெற்றியில் திருநீறு தரித்திருக்கிறானோ அவன் அருகில் மூதேவி செல்ல பயப்படுவாள் என்கிறது கிருஷ்ண யஜுர்வேதம்.


***


ஆறுவித குணங்கள்
ஆன்மீகப்பாதையில் சமம், தமம், உபரதி, திதிட்சை, சிரத்தை 
சமாதானம் ஆகிய ஆறுவித குணங்கள் இருக்க வேண்டும்.

சமம்-சாந்தம்-ஆசை விலகி அமைதி பெறுவது. அதாவது மன அடக்கத்தை குறிக்கும்.

  தமம்-புலனடக்கம்-புலன் நுகர்ச்சி சாதனைகளைக்
கட்டுப்படுத்துவதைக் குறிக்கும்.

உபரதி-பரிபூரண-திருப்தி-திருப்தி நிலையைக் குறிக்கும் துறவின் மூலம் விருத்தி பெரும்.திதிட்சை-அபரிமித சக்தி-மனம், உடல் இரண்டிற்கும் உரியது.  

சிரத்தை-ஆர்வம், நம்பிக்கை-இது பரம்பொருள், சாஸ்திரங்கள்,
குரு உபதேசங்கள் ஆகியவற்றுள் நம்பிக்கை வைத்தல்.

சமாதானம்-சமமான மனோநிலை-மனஒருமைப்பாடு புறச் சிதறலின்றி லட்சியம் ஒன்றிருத்தலாகும்.

***


திருநீறு அணிவதால் உண்டாகும் நன்மைகள்
உடல் நாற்றத்தைப் போக்கும், தொற்று நோய்க் கிருமிகளைக் கொல்லும், தீட்டுக் கழிக்கும், உடலை சுத்தம் செய்யும், வியாதிகளைப் போக்கும், பில்லி, சூனியம், கண்ணேறு பாதிக்காது காக்கும், முகத்திக்கு அழகைத் தரும், நினைவாற்றலை வளர்க்கும், அறிவு கூர்மையை தரும், ஞானத்தை உண்டக்கும், பாவத்தை போக்கும், திருவடிப் பேற்றைத் தரும்.

***



வலம் வருதல்
     1.விநாயகர் – 1 அல்லது 3 முறை
     2.கதிரவன் – 2 முறை
     3.சிவபெருமான் – 3,5,7 முறை (ஒற்றைப்படை)
     4.முருகன் – 3 முறை
     5.தட்சிணாமூர்த்தி – 3 முறை
     6.சோமாஸ்கந்தர் – 3 முறை
     7.அம்பாள் – 4,6,8 முறை (இரட்டைப்படை)
     8.விஷ்ணு – 4 முறை
     9.இலக்குமி – 4 முறை
     10.அரசமரம் – 7 முறை
     11.அனுமான் – 11 அல்லது 16 முறை
     12.நவக்கிரகம் – 3 அல்லது 4 முறை
     13.பிராத்தனை – 108 முறை

***


பஞ்சகவ்யம்
     பசுவிடமிருந்து கிடைக்கும் ஐந்து கீழ்கண்ட பொருட்களே பஞ்சகவ்யம் எனப்படும். இதில் பல தேவர்கள் வாசம் செய்கிறார்கள்.
     1.பாலில் – சந்திரன்
     2.தயிரில் – வாயு பகவான்
     3.கோமியத்தில் – வருண தேவன்
     4.சரணத்தில் – அக்னி பகவான்
5.நெய்யில் – சூரிய பகவான்

***

பயனற்றவை ஏழு

     1.ஆபத்துக்கு உதவாத பிள்ளை
     2.நல்ல பசிக்கு உதவாத அன்னம்
     3.தாக வெப்பத்தைக் தீர்க்காத தண்ணீர்
     4.வறுமை அறியாமல் அதிக செலவு செய்யும் மனைவி
     5.கோபத்தை தணிக்காத அரசன்(புருசன்)
     6.குருவின் உபதேசங்களை கொள்ளாத சீடன்
     7.பாவங்களை தீர்க்காத தீர்த்தங்கள்

***


லட்சுமி தங்க
     வீட்டில் ஒரு நாளைக்கு இரண்டு முறை, காலையிலும், மாலையிலும், விளக்கேற்ற வேண்டும். சுவாமி மாடத்துக்கு முன்பும், வாசல் மாடத்திலும் விளக்கேற்றுவது நல்லது. காலையில் விளக்கேற்ற முடியாதவர்கள் மாலையில் ஐந்தரை மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக சுவாமி படத்துக்கு விளக்கேற்ற வேண்டும்.

     அதிகாலையில் வீட்டின் முன்புறம், பின்புறம் சாணம் தெளிக்க வேண்டும். பின்புறமாக மூதேவி வெளியேறவும், முன்புறமாக லட்சுமி(ஸ்ரீதேவி) வீட்டுக்குள் வரவும் இப்படிச் சாணம் தெளிக்க வேண்டும். தெளிப்பதற்கு பசுஞ்சாணத்தையே உபயோகிக்க வேண்டும்.கன்றுக் குட்டி போட்டுள்ள பசுவின் சாணத்தையே தெளிக்க உபயோகிக்க வேண்டும்.அந்தப் பசு சாணம் போடும் போது சாணம் பூமியில் விழுவதற்கு முன் ஒரு இலையில் பிடித்து அதைக் கொண்டே சாணம் தெளிக்க வேண்டும். அல்லது சாணம் கிடைக்காவிட்டால் பூமியில் சாணம் விழுந்து விட்டால் அதன் மேற்புறத்தை ஒதுக்கிவிட்டு, நடுப்பக்கத்தில் இறுகாமலிருக்கும் சாணத்தை மட்டும் கொண்டு வந்து கரைத்துக் தெளிக்க வேண்டும்.

No comments: